/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லோக் அதாலத் மூலம் ரூ.7 கோடிக்கு தீர்வு
/
லோக் அதாலத் மூலம் ரூ.7 கோடிக்கு தீர்வு
ADDED : டிச 15, 2024 01:27 AM
தர்மபுரி, டிச. 15-
தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவருமான திருமகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதே போன்று அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட, 5 தாலுகா நீதிமன்றத்திலும் நடந்தன.
இதில், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, 2,539 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 1,228 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு, அதற்கான சமரசத் தொகை, 4.17 கோடி ரூபாய் மற்றும் வங்கி வாராகடன், 137 வழக்குகள் சமரசம் பேசி தீர்த்து, 2.84 கோடி ரூபாய்க்கு முடிக்கப்பட்டன. இதில், மொத்தம், 2,739 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,365 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகையாக, 7 கோடி ரூபாய்க்கான தீர்வு காணப்பட்டது. இதில், தீர்வு காணப்பட்டதற்கான ஆணை வழக்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது.