/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
/
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : நவ 14, 2024 07:01 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம், மணியம்பாடி ஊராட்-சியில், ஒடசல்பட்டி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட, 9 கிராமங்-களில், 7,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இதில் மணியம்பாடியில், ஆதிதிராவிடர் காலனி, ரெட்டியார் தெரு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர், கடத்துார் -- தர்மபுரி சாலையை வழியாக செட்டிக்குட்டை பகுதிக்கு சென்று தேங்குகி-றது. அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும், பிடாரி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. செட்டிகுட்டையில் தேங்கிய கழி-வுநீர் சாலையில் சென்று துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகுதி தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீரால் கோவிலுக்கு செல்லவும், வீடுகளுக்கும் செல்ல முடியாமல் அப்ப-குதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள், ஆதிதிராவிடர் தெரு, ரெட்டியார் தெரு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், மழைநீர் ஆகியவை செல்ல வசதியாக, புதிய சாக்கடை கால்வாய் அமைத்து, கெங்கையம்மன் நீரோடை வழியாக ஏரிக்கு விட, பணி
மேற்கொண்டனர். ஆனால் கெங்கை-யம்மன் நீரோடை நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகள் கட்டியவர்கள், மழைநீர், கழிவு நீர், இந்த நீர் வழிப்பாதையில் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள்
பாதியில் நிறுத்தப்பட்டன. இதை தொடர்ந்து, மணியம்பாடி ஊர்மக்கள் நீர் வழிபாதை ஆக்கிரமிப்பை அகற்றி, முறையாக மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல கால்வாய் அமைக்க, அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

