/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED : டிச 29, 2024 12:50 AM
சிவன் கோவில்களில்
சனி பிரதோஷ வழிபாடு
தர்மபுரி, டிச. 29-
சனி பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்களை தொடர்ந்து அலங்காரம் நடந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிேஷக அலங்காரங்கள் நடந்தன.
அரூரில்...
அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான
பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.