/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.50,000 அபராதம ்வசூல்
/
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.50,000 அபராதம ்வசூல்
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.50,000 அபராதம ்வசூல்
குட்கா விற்ற கடைக்கு 'சீல்' ரூ.50,000 அபராதம ்வசூல்
ADDED : டிச 01, 2024 01:39 AM
குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
ரூ.50,000 அபராதம ்வசூல்
பாலக்கோடு, டிச. 1-
தர்மபுரி மாவட்ட, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் ஆகியோர், புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பாலக்கோடு ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., சிங்காரம் ஆகியோர், பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், பாலக்கோடு கோட்டை தெருவிலுள்ள ஒரு மளிகை கடையில், தடை செய்யப்பட்ட ஒரு கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். சம்மந்தப்பட்ட கடைக்கு ஏற்கனவே ஒரு முறை அபராதம் விதித்த நிலையில், மீண்டும் விற்றதால், 50,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு, 'சீல்' வைத்தனர்.