/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : ஜன 26, 2025 04:31 AM
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டாரத்தில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் கம்பைநல்லுார் போலீசார், புகை-யிலை பொருட்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்-டனர்.
செம்மணஹள்ளி சாலையில், தனியார் பள்ளி அருகே ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்-பட்டது. தொடர்ந்து, மேல்நடவடிக்கைக்கு, கம்பைநல்லுார் எஸ்.ஐ., யோகபிரகாஷ் உணவு பாதுகாப்புத்-துறையினருக்கு பரிந்-துரை செய்தார். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிய-மன அலுவலர் பானுசுஜாதா உத்தரவுப்படி, நேற்று உணவு பாது-காப்புத்துறையினர் மற்றும் போலீசார் கடை உரிமையாளரிடம் தலா, 25,000 ரூபாய் அபராத தொகைக்கான நோட்டீஸ் வழங்கி, 15 நாட்கள் கடையை திறக்கக்கூடாது என எச்சரித்து சென்றனர்.