/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
ADDED : செப் 22, 2024 05:30 AM
பாலக்கோடு: பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு துறை அலவலர் மற்றும் போலீசார், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்து, 'சீல்' வைத்தனர்.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நியமன அலுவலர் பானுசுஜாதா மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் உத்திரவின் படி, பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். இதில், பாலக்கோடு, கோட்டை தெருவில் ஒரு மளிகை கடை, தர்மபுரி மெயின் ரோடு, போக்குவரத்து பணிமனை அருகில் ஒரு பெட்டி கடை என, 2 கடைகளில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றில், இருமுறை பிடிபட்ட கடை உரிமையாளருக்கு, 50,000 ரூபாய், முதல்முறை பிடிபட்ட கடைகளுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, இரு கடைகளுக்கும், 'சீல்' வைத்தனர்.