/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வங்கி, தபால் ஆபீஸ் இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு
/
வங்கி, தபால் ஆபீஸ் இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு
வங்கி, தபால் ஆபீஸ் இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு
வங்கி, தபால் ஆபீஸ் இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு
ADDED : ஆக 29, 2025 01:33 AM
ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த உத்தனப்பள்ளியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வந்தது. இந்த வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணாபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அதேபோல, 110 ஆண்டுகளாக உத்தனப்பள்ளியில் செயல்பட்டு வந்த தபால் நிலையமும் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னறிவிப்பின்றி கிருஷ்ணாபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
பஸ் வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததால் உத்தனப்பள்ளியில் இருந்து கிருஷ்ணாபுரத்திற்கு நடந்தே செல்ல வேண்டும் என, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த, 16ல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், உத்தனப்பள்ளி மக்கள் நேற்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
A