ADDED : ஜன 01, 2026 07:57 AM

தர்மபுரி: தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடி ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்துார் உட்பட, 13 மாவட்டங்களை சேர்ந்த, பட்டுக்கூடு விவசா-யிகள், வெண்பட்டு கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு பட்டுக்கூடுக-ளுக்கு நல்ல விலை கிடைப்பதால் வாரத்தில், 6 நாள் நடக்கும் ஏலத்தில், எராளமான விவசாயி கள் கலந்து கொள்கின்றனர். கடந்த, 2025ல், ஓராண்டில் மட்டும் நடந்த ஏலத்தில், 7,884 விவ-சாயிகள் ஏலத்திற்கு வந்திருந்தனர்.
இதில், 20,155 குவியல்களாக, 5 லட்சத்து, 62,493 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்தி-ருந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு, 340 முதல், 889 ரூபாய் வரை ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 33.84 கோடி ரூபாய். இந்த ஏலத்தால் அர-சுக்கு, 50.76 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்-ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

