ADDED : பிப் 19, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 43 விவசாயிகள் ஏலத்திற்கு வந்தனர். 80 குவியல்களாக, 3,165 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.
இவை, 702 முதல், 903 ரூபாய் வரை சராசரியாக, 842 ரூபாய் என ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 26.65 லட்சம் ரூபாய். ஏலத்தால் அரசுக்கு, 39,976 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
