தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஒகேனக்கல்லில் மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

ஒகேனக்கல்லில் மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

ஒகேனக்கல்லில் மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜன 31, 2026 08:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்கள், படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.

ஒகேனக்கல் அரசு மீன் பண்ணை பயிற்சி நிலையத்தில் நடந்த பயிற்சிக்கு, மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த பயிற்சியில், 27 பேர் கலந்து கொண்டனர்.

இதில், மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பம் குறித்தும், உணவு பொருள் தயாரிக்கும் அடிப்படை பயிற்சி குறித்து பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை மேற்பார்வையாளர் நந்தகோபால் பேசுகையில், பயிற்சியில் உணவை தரமாகவும், சுவையாகவும், உண்ணக்கூடியதாகவும் வழங்கிடவும், ரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல், உணவுப்பொருட்கள் தயாரிக்க வேண்டும். உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் உள்ள சைவ, அசைவ குறியீடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த பயிற்சியில் ஒகேனக்கல் மீன்வள மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us