ADDED : ஏப் 03, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு
அரூர்:அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்னை கொங்கு அறக்கட்டளை சார்பில், 2.15 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆர்.ஓ., குடிநீர் வசதி மற்றும் ஸ்மார்ட் போர்டு வசதி செய்யப்பட்டுள்ளது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பாரதி தலைமை வகித்தார். அம்மன் கிரானைட்ஸ் உரிமையாளரும், கொங்கு அறக்கட்டளை பொறுப்பாளருமான முத்து ராமசாமி ஸ்மார்ட் போர்டு மற்றும் ஆர்.ஓ., குடிநீர் வசதியை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இதில், லயன்ஸ் கிளப் நிர்வாகி தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

