/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மரங்கள் வெட்டுவதை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
/
மரங்கள் வெட்டுவதை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : மார் 05, 2024 11:59 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செந்தில் நகர் ராஜாஜி நீச்சல் குளம் பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தர்மபுரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள செந்தில் நகரில், மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில், ராஜாஜி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும், 100க்கும் மேற்பட்டோர் நீச்சல் பயிற்சிக்கு வருகின்றனர். நீச்சல் குளத்தை சுற்றி பழ மரங்கள், தென்னை, புங்கன் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கு முன் இங்கிருந்த ஒரு வேப்ப மரம், ஒரு நாவல் மரம் என, 2 மரங்கள் வெட்டப்பட்டன.
இதுகுறித்து, நீச்சல் குளத்தின் நிர்வாகத்திடம் விசாரித்தபோது, வளர்ச்சி பணிக்காக அங்கு சிறுவர் பூங்கா அமைக்க, மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, அந்த மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிவித்தனர். எனவே, இதிலுள்ள பழமையான மரங்களை வெட்ட பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், இங்குள்ள மரங்களை வெட்டாமல் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

