நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில், கர்ப்பிணிகளுக்கு நேற்று சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் நடந்த விழாவில், அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை வழங்கினார்.
அரூர் நகராட்சி துணைத் தலைவர் தனபால், கவுன்சிலர் முல்லைரவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தென்னரசு, சவுந்தரராசு கலந்து கொண்டனர்.

