கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
ADDED : செப் 05, 2026 05:03 AM

பாப்பிரெட்டிப்பட்டி; கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில், திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் விமல் ரவிக்குமார் தலை-மையில் நடந்தது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, நான்கு வகையாக குப்பை பிரிக்கப்பட வேண்டும். மக்கும் குப்பைகளை பச்சை கலர் தொட்டியிலும், மக்-காத குப்பைகளை ஊதா கலர் தொட்டியிலும், சுகாதார கழிவு களை சிவப்பு கலர் தொட்டியிலும் இட வேண்டும்.
பெரிய கழிவுகள் உற்பத்தியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 100 கிலோ அல்லது, 40,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்த அல்லது, 20,000 சதுர மீட்டர் கட்டமைப்பு பரப்பு கொண்ட பள்ளி, மருத்துவ-மனை, திருமண மண்டபம், ஹோட்டல், சந்தை அல்லது நிறுவனத்தை சார்ந்தோர் ஆன்லைனில் பதிவு செய்து ஊராட்சிகளில் புதைக்க வேண்டும். ஈரக் கழிவுகளை உரிய கட்டணத்துடன் ஊராட்-சிகளில் மறுசுழற்சி செய்ய வேண்டும் என பயிற்-சியில் தெரிவிக்கப்பட்டது.மேலும் ஊராட்சி வரியினங்கள் வசூலிப்பது, கட்டடங்களுக்கு அனுமதி தருவது சீரான குடிநீர் வழங்கல் தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டன. பயிற்சி வகுப்பில் பி.டி.ஓ., கலைச்செல்வி, வட்-டார ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, திட்ட கழிவு மேலாண்மை நிபுணர் வேம்பு குமார் மற்றும் சபரி ஊராட்சி செயலாளர்கள், திட்ட ஒருங்கி-ணைப்பாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
