தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் எஸ்.பி., ஆய்வு

தர்மபுரியில் எஸ்.பி., ஆய்வு

தர்மபுரியில் எஸ்.பி., ஆய்வு


ADDED : ஜூலை 15, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:தர்மபுரியில் கடந்த ஒரு மாதமாக, சில இடங்களில் கொலை மற்றும் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன. தர்மபுரி டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். மாலை நேரங்களில் டவுன் பகுதியில் பைக் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பள்ளி மாணவியருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் அச்சத்தை போக்குவதற்காக, மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.பி., அருண் கபிலன் நேற்று மாலை தர்மபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப்பள்ளி, டவுன் பஸ் ஸ்டாண்ட், பழைய புறநகர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் திருப்பத்தூர் சாலை உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்.ஐ.,க்கள் வெங்கடேஷ் குமார், சதீஷ் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us