/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காலபைரவர் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை
/
காலபைரவர் கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை
ADDED : டிச 23, 2024 09:37 AM
தர்மபுரி: அதியமான்கோட்டையிலுள்ள தட்ஷணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. இதில், சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அதிகாலை முதல், சுவாமிக்கு, 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடக்கவுள்ளன. பின்னர், சுவாமிக்கு உபகார பூஜைகளுடன், சிறப்பு அலங்கார சேவையும், மஹா தீபாராதனையும், இன்றிரவு, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில், 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு சத்ரு சம்ஹார யாகம் மற்றும் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

