ADDED : ஜூலை 01, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
அரூர்:அரூர் வட்டாரத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கப்பட்டது.
அரூர்
கல்வி மாவட்டம், அரூர் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்படும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,
20 ஆண்டுகள் பணிபுரிந்து சிறப்பு நிலை பெற்ற, 61 ஆசிரியர்களுக்கு
சிறப்பு நிலை ஆணை வழங்கும் விழா, அரூர் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில்
நேற்று நடந்தது. அரூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி)
விஜயகுமார் தலைமை வகித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஆணையை
வழங்கினார். விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் மாதம்மாள், ராமு
மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
