/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பயிற்சி முகாம்
/
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பயிற்சி முகாம்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பயிற்சி முகாம்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பயிற்சி முகாம்
ADDED : நவ 04, 2025 02:11 AM
அரூர், அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த, ஓட்டுசாவடி  நிலை முகவர்களுக்கு   வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த பயிற்சி முகாம், அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை  தலைமையில்,  மோப்பிரிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடந்தது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும், வாக்காளர்களுக்கு படிவங்கள் பூர்த்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் உதவி செய்ய வேண்டும்.
போலி வாக்காளர்கள், இரட்டைப்பதிவு, இறந்தோர் விபரங்கள் நீக்காமல் இருப்பது குறித்து விபரங்கள் பெற்று உரிய முறையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். கிராமங்களில் வாக்காளர்கள் தோட்ட வேலைக்கு சென்று விடுவதால், மாலை நேரங்களில் திருத்த பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, பல்வேறு அறிவுரை வழங்கி, வாக்காளர் பதிவு அலுவலர்கள்  பேசினர். பயிற்சி முகாமில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள்,  தேர்தல் துணை தாசில்தார் ரஞ்சித், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

