/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'போக்சோ' வழக்கில் சிக்கிய எஸ்.எஸ்.ஐ., தற்கொலை
/
'போக்சோ' வழக்கில் சிக்கிய எஸ்.எஸ்.ஐ., தற்கொலை
ADDED : பிப் 28, 2026 05:31 AM

தர்மபுரி: புகார் அளிக்க வந்த சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரத்தில், 'டிஸ்மிஸ்' ஆன எஸ்.எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, மணியகாரன்கொட்டாயை சேர்ந்தவர் சகாதேவன், 58. இவருக்கு மகேஸ்வரி, 50, என்ற மனைவி, மகன், மகள் உள்ளனர்.
இவர், 2023ல், பென்னாகரம் அடுத்த ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தபோது, புகார் அளிக்க வந்த, 17 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார்.
ஏமாற்றப்பட்டதை அறிந்த சிறுமி, பென்னாகரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், 2023 நவம்பரில் போக்சோ பிரிவில், சகாதேவனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சகாதேவனை போலீஸ் பணியிலிருந்தும் விடுவித்து உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் அருகே, மரத்தில் சேலையால் துாக்கிட்ட நிலையில் சகாதேவன் இறந்து கிடந்தார்.
தர்மபுரி டவுன் போலீசார், சகாதேவன் சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.

