/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நவீன கல்வி முறையில் செயல்படும் செயின்ட் மேரிஸ் பப்ளிக் பள்ளி
/
நவீன கல்வி முறையில் செயல்படும் செயின்ட் மேரிஸ் பப்ளிக் பள்ளி
நவீன கல்வி முறையில் செயல்படும் செயின்ட் மேரிஸ் பப்ளிக் பள்ளி
நவீன கல்வி முறையில் செயல்படும் செயின்ட் மேரிஸ் பப்ளிக் பள்ளி
ADDED : ஏப் 20, 2025 01:39 AM
ஆத்துார்:
ஆத்துாரில், முல்லைவாடி மற்றும் உப்போடை அருகே, 10 ஏக்கர் நிலப்பரப்பில் செயின்ட் மேரிஸ் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. சேலம் கத்தோலிக்க மறைமாவட்டத்தால், 2020ம் ஆண்டு முதல் செயல்படும் பள்ளி பொறுப்பை, சேலத்தின் அருட்தந்தை அருளப்பன் ஏற்றிருக்கிறார். இதன் முதல்வராக, வெளிநாடு, உள்நாட்டில் சிறந்த பள்ளிகளில் பணியாற்றிய நிக்கோலஸ் ஜெரால்டின் மேரி உள்ளார்.
சி.பி.எஸ்.இ., - டில்லி அங்கீகாரம் பெற்ற பள்ளி. மழலையர் வகுப்புகள் முதல், பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர் படிக்கின்றனர். என்.சி.இ.ஆர்.டி., - ஆக்ஸ்போர்டு புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நவீன கல்வி முறை பின்பற்றப்படுகிறது. விளையாட்டுகளோடு, மாணவ, மாணவியரின் திறமைகளை வளர்க்க, நுண்கலை பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஜே.இ.இ., நீட், பக்ளோரியா தேர்வுகளுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்தும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.