/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 8வது முறையாக தொடர் சாம்பியன்
/
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 8வது முறையாக தொடர் சாம்பியன்
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 8வது முறையாக தொடர் சாம்பியன்
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 8வது முறையாக தொடர் சாம்பியன்
ADDED : செப் 20, 2024 01:37 AM
ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்
8வது முறையாக தொடர் சாம்பியன்
பாப்பிரெட்டிப்பட்டி, செப். 20-
பாப்பிரெட்டிப்பட்டி, சரக அளவில் நடந்த தடகள விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தொடர் சாதனை படைத்து வருகின்றனர்.
இப்போட்டிகளில், பெண்களுக்கான, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சாரணி 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் 3ம் இடமும், பிரித்திகா, 100 மீ., ஓட்டத்தில் முதலிடமும், 200 மீ., ஓட்டத்தில் 2ம் இடமும், 400 மீ., தொடர் ஓட்டத்தில் பிரித்திகா, ஷபானா, மோனிகா, மற்றும் சபிதா முதலிடமும், 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் இலக்கியா, ரிஷா, ஷபானா மற்றும் சாரணி மூன்றாமிடமும், 1,500 மீ., 3,000 மீ., ஓட்டத்தில் இலக்கியா, 3ம் இடமும், 800 மீ., ஓட்டத்தில் ரிஷா, 3ம் இடமும், வட்டு எறிதல் போட்டியில் லிசா முதலிடமும் பெற்றனர்.
ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகளில், கோலுான்றி தாண்டுதல், ஈட்டி எறிதல், ஓட்டம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், உயரம், நீளம் தாண்டுதல் ஆகிய விளையாட்டில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சரக போட்டிகளில், 70 புள்ளிகள் பெற்று, 8வது முறையாக தொடர் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை, பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.