ADDED : ஜூலை 06, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் நண்பர்கள் கால்பந்து குழு சார்பில், 5ம் ஆண்டு மாநில கால்பந்து போட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. குமார் தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் ராகவன், குமார், கார்த்திக், மாதேஷ், திருமலை, ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் பச்சையப்பன் போட்டியை துவக்கி வைத்தார். 2 நாட்கள் நடக்கும் போட்டியில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.