தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்

மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்

மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்


ADDED : ஜன 10, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். செயலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். இதில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்-களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.பணித்திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழி-வாங்கும் நடவடிக்கையை கைவிட்டு, 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணி-யாளர்களுக்கு, 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும்.

அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உட்பட, 15 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us