ADDED : ஆக 07, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி:தர்மபுரி
மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா பழைய இண்டூரில் ஆஞ்சநேயர் கோவில்
உள்ளது.
இதன் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன்
வாகனம் மற்றும் கம்பரசர் மூலம் நொரம்பு மண் மற்றும் கற்கள் வெட்டி
எடுப்பதாக கிடைத்த தகவலின் படி, நத்தஅள்ளி வி.ஏ.ஓ., ராமசுந்தரம்
நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு அங்கு சென்றார். அவரை கண்டதும்
பொக்லைன் வாகன ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், பொக்லைன் வாகனம்
மற்றும் கம்பரசரை கைப்பற்றி, இண்டூர் போலீஸ் ஸ்டேஷனில்
ஒப்படைத்தார். மேலும் ராமசுந்தரம் அளித்த புகார் படி
அ.செக்காரப்பட்டியை சேர்ந்த சுபாஷ், இ.கே.புதுார் ஜம்பேரி ஆகிய
இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
