ADDED : நவ 23, 2026 12:42 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி போலீசார் ஏ.பள்ளிப்பட்டி - கோபாலபுரம் சாலையில் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது லாரியில் கற்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலால், ஒட்டாளம் பள்ளம் ஓடை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தியபோது, லாரி டிரைவர் தப்பினார்.
லாரியில் அனுமதியின்றி, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கற்கள் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து கற்கள் கடத்திய நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்த கதிரவன், 21, லாரி டிரைவர் கார்த்திக், 35, ஆகிய இருவர் மீது ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, கதிரவனை
கைது செய்தனர். தப்பிய கார்த்திகை தேடி வருகின்றனர்.
