/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிராமங்களில் வைக்கோல் விற்பனை ஜோர்
/
கிராமங்களில் வைக்கோல் விற்பனை ஜோர்
ADDED : ஆக 09, 2025 01:25 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட கிராமப்புறங்களில் கடந்த, சில மாதங்களாக
கடும் வறட்சி ஏற்பட்டது.
இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பெய்த மழையால் விலை நிலங்களில் புற்கள் முளைக்க துவங்கியுள்ளன. இருந்தபோதிலும், வறட்சியால் பொதுமக்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், தீவன பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், செங்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேன் மூலம் கொண்டு
வரப்படும் வைக்கோல்களை வாங்குகின்றனர். புரோக்கர்கள் மினி வேன் மற்றும் டெம்போ, லாரி, மூலமாக வைகோல்களை ஏற்றி வந்து, ஒவ்வொரு கிராமமாக விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, இந்த வைக்கோல்கள் கடத்துார், ஒடசல்பட்டி கூட்ரோடு, பொம்மிடி, சாமியாபுரம் கூட்ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் விற்கப்படுகிறது.
இதில் சிறிய மினி வேன் லோடு, 3,000 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு வைக்கோல், 180 முதல், 200 ரூபாய் என விற்கப்படுகிறது.

