/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி நகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
/
தர்மபுரி நகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
தர்மபுரி நகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
தர்மபுரி நகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
ADDED : ஜூலை 09, 2025 02:11 AM
தர்மபுரி, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளில் தெரு நாய்கள் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியில் வரும் சூழல் உள்ளது. சில சமயங்களில், வெறிநோய் பாதிப்புக்குள்ளான தெரு நாய்கள் கடித்ததால், பலர் பாதிக்கபட்டனர்.
இந்நிலையில், திண்டுக்கல், திருச்சி மாநகராட்சிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும், சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்திற்கு, தர்மபுரி நகராட்சியில், நாய்களை கட்டுப்படுத்தும் பணி பணி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தர்மபுரி நகராட்சி கமிஷ்னர் சேகர் கூறியதாவது: தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டிருந்தார். விலங்குகள் நலவாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, தெரு நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. நகராட்சியில், 4,000க்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கி, நேற்று வரை, 328 தெரு நாய்களை பிடித்து, அவற்றிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் மூலம், அறுவை சிகிச்சை செய்து, உணவளித்து பராமரித்த பின், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, நாய்களை பிடித்த இடத்தில் மீண்டும் விடுவதை உறுதி செய்து வருகிறோம். இதை, தனி குழு அமைத்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.