தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நாளை கடையடைப்பு போராட்டத்துக்கு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை'

நாளை கடையடைப்பு போராட்டத்துக்கு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை'

நாளை கடையடைப்பு போராட்டத்துக்கு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை'


ADDED : அக் 03, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாளை கடையடைப்பு போராட்டத்துக்கு

கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை'

தர்மபுரி, அக். 3-

'தர்மபுரி மாவட்டத்தில், நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாளை அக்.,4 அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அதில் வணிகர்கள் கலந்து கொள்ளுமாறு, ஒரு கட்சி சார்பாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில், எந்த வணிகரையும்

கட்டாயப்படுத்தி, கடையடைப்பு செய்ய சொல்லவோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி, மிரட்டல் விடுப்பதோ குற்றம். எனவே, அவ்வாறு செயல்படுவோர் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இயல்பாக வழக்கம் போல் கடை செயல்படவும், வணிகம் மேற்கொள்ளவும் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. வணிகர்களுக்கும், கடை மற்றும் நிறுவனங்களுக்கும் போதுமான போலீசார் பாதுகாப்பு வழங்கப்படும். கடை வீதி, வணிக வளாகங்கள், உழவர் சந்தைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும். போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், கடையை நடத்துவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். பொதுமக்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, வணிக நிறுவனங்களில் வழக்கமாக, வாணிபம் செய்ய எவ்வித அச்சமும், தயக்கமும் கொள்ள தேவையில்லை என, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது, பொதுமக்கள் புகார் அளிக்கலாம். உரிய முறையில், அளிக்கப்படும் புகார் மீது, தகுந்த சட்ட நடவடிக்கையை போலீஸ் உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாளை, பா.ம.க., சார்பில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us