/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
/
பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
பணிகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : பிப் 01, 2024 10:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், அனைத்து துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள், 33 பேர் ஆய்வு செய்தனர். இதில், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஊராட்சி ஒன்றியங்களில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை மனுக்களாக பெற்றனர்.
கடத்துார் பேரூராட்சியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கூரை அமைக்கும் பணிகள், புதுரெட்டியூரில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைப்படும் பணியை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
அப்போது, கடந்த, 2 மாதத்திற்கு முன், இப்பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், பணிகள் இதுவரை தொடங்காமல், காலி இடமாகவே இருந்தது. இதை கண்ட கலெக்டர் சாந்தி, செயல் அலுவலர் விஜயசங்கரிடம் உடனடியாக பணிகள் தொடங்க, எச்சரித்தார். பணிகளில் மெத்தனம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
போதக்காடு அரசு பள்ளியை பார்வையிட்டு, பள்ளி ஆசிரியர் பாரதி தனிப்பட்ட முறையில் பள்ளியில் பல்வேறு பணிகளை செய்துள்ளதை கண்டு பாராட்டினார். சுற்றுச்சுவரில் வரைந்துள்ள ஓவியங்களை போன்று, மாவட்ட பள்ளிகளில் ஓவியங்கள் வரைய, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் கள ஆய்வு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் எஸ்.பி., ஸ்டிபன் ஜேசுபாதம், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.