/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் நிலத்தை மீட்க கோரி போராட்டம்
/
கோவில் நிலத்தை மீட்க கோரி போராட்டம்
ADDED : பிப் 14, 2024 10:41 AM
பாலக்கோடு: போயர் சாலை கிராமத்தில், ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலத்தை மீட்க கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த போயர் சாலை கிராமத்தில், பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமாக, 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதை, அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும், அப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால், கோவில் நிலம் வழியாக அருகில் உள்ள காட்டு பகுதிக்கு, இயற்கை உபாதை கழிக்க சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பெண்கள் மீது, கோழிப்பண்ணை உரிமையாளர் தாக்குதல் நடத்துவதும், ஆபாச வார்த்தைகளாலும் பேசி வருகிறார். மேலும், இங்கு கோழி கழிவுகளை கொட்டுவதால், துர்நாற்றம் வீசி அருகில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து, பொதுமக்கள் ஒன்று திரண்டு அறநிலயத்துறை நிலத்தை மீட்க வேண்டுமென நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அங்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

