ADDED : டிச 17, 2025 05:51 AM

தர்மபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது, போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் நவ., 27ல், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்காமல் இருக்க, 10 லட்சம் ரூபாய் தருவதாக உள்ளூர் பிரமுகர்கள் மூலம் ஆசிரியர் பேரம் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் டிச., 13ல் வெளியான நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, ஆசிரியரை பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர்.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர் சாந்திமணி, 54, மூலம், 18 நாட்களுக்கு பின் பள்ளி ஆய்வகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சமூக அறிவியல் ஆசிரியர் மணிவண்ணன், 55, மீது நேற்று முன்தினம், தர்மபுரி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார், போக்சோவில் மணிவண்ணனை நேற்று கைது செய்தனர்.
