/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இரண்டாவது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
/
இரண்டாவது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
இரண்டாவது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
இரண்டாவது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
ADDED : ஜன 04, 2025 01:38 AM
தர்மபுரி, ஜன. 4-
தர்மபுரி அருகே, அரசு பள்ளியில் இருந்து இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த கோரி, 2வது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் பஞ்., க்கு உட்பட்ட ஆட்டுக்காரன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 138 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், கடந்த, 6 மாதத்திற்கு முன், பணியில் இருந்த, 4 ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், 4 ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய பெற்றோர் சி.இ.ஓ.,விடம் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், குற்றசாட்டு எழுந்த, 4 ஆசிரியர்கள் உட்பட, 7 ஆசிரியர்
களையும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, அதிகாரிகள்
உத்தரவிட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆட்டுக்காரன்பட்டி நடு
நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை. இது குறித்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தென்றல் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு, பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பெற்றோர் தரப்பில், புகாருக்கு உள்ளாகாத தலைமை ஆசிரியர் உட்பட இடமாறுதல் செய்த, 3 ஆசிரியர்களை மீண்டும் தங்கள் பகுதி பள்ளியில் பணியமர்த்தினால் தான் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களின் மெத்தன போக்கால், நேற்று, 2 வது நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பெற்றோரிடம் பேசி, சுமுக தீர்வு ஏற்படுத்த முடியாத நிலையில், நேற்று, தி.மு.க., ஒன்றிய செயலாளர் காவேரி பள்ளிக்கு சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பெற்றோர் தரப்பில் ஒரே முடிவாக, 3 ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.