ADDED : செப் 02, 2026 06:02 AM
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் சிறு விளையாட்டு அரங்கில், அரூர் சரக அளவிலான தடகள
போட்டி மற்றும் குழு போட்டிகள் நடந்தது.
இதில், சீனியர் பிரிவில், 110
மீட்டர் தடை ஓட்டத்தில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த
மாணவர் தேவானந் ஜெரோமி முதலிடத்தை பிடித்தார். குண்டு எறிதலில்
ஜெகதீஸ்வரன் முதலிடமும், போல்வால்ட் போட்டியில் இம்ரான் முதலிடம்
பெற்றனர். 80 மீட்டர் தடை ஓட்டத்தில் தயாநிதி இரண்டாமிடம்
பிடித்தார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில், தேவானந் ஜெரோமி, மெல்வின்,
ஜெகதீஸ்வரன், முஹம்மத் ஆகிய மாணவர்கள் முதலிடம் பெற்று மாவட்ட
போட்டிக்கு தகுதி பெற்றனர்.ஜூனியர் கால்பந்து, ஜூனியர் ஹாக்கி
போட்டியில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்
பிடித்தனர். சீனியர் வாலிபால் மற்றும் சூப்பர் சீனியர் ஹாக்கி
போட்டியில், 2ம் இடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற
மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள்
பழனிதுரை, கலைமன்னன், வெங்கடாசலம் ஆகியோரை, தலைமையாசிரியர்
காசிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
