/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொரப்பூர் மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2வில் சிறப்பிடம்
/
மொரப்பூர் மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2வில் சிறப்பிடம்
மொரப்பூர் மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2வில் சிறப்பிடம்
மொரப்பூர் மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2வில் சிறப்பிடம்
ADDED : மே 11, 2025 01:47 AM
அரூர், மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். இதில், மாணவர் கவுதம், 600க்கு, 589 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ், 98, ஆங்கிலம், 98, இயற்பியல், 99, வேதியியல், 99, உயிரியல், 97, கணிதம், 98 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவி பூவிழி, 586 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்துள்ளார். அவர், தமிழ், -98, ஆங்கிலம், 97, இயற்பியல், 98, வேதியியல், 98, உயிரியல், 96, கணிதம், 99, மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் நவீன்குமார், 581 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்துள்ளார்.
மேலும், 580 மதிப்பெண்களுக்கு மேல், 4 பேர்; 570க்கு மேல், 9 பேர்; 560க்கு மேல், 11 பேர்; 550க்கு மேல், 16 பேர்; 500க்கு மேல், 50 பேர் பெற்று சாதனை படைத்துள்ளனர். இது தவிர தமிழ், 1, இயற்பியல், 1, கணினி அறிவியலில், 1 என, 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை, மருதம் மெட்ரிக் பள்ளி தலைவர் தவமணி, தாளாளர் திலகரசன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் சக்திவேல், முதல்வர் ராமு, ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, போக்குவரத்து மேலாளர் நாகராஜ் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள்,
பணியாளர்கள் வாழ்த்தினர்.