sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

/

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்


ADDED : ஜூலை 05, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த வகுரப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 35 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இங்கு கடந்த, 2016 முதல், தமிழ்மணி என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, 8 ஆக இருந்த நிலையில், அவர் வீடு வீடாக சென்று பெற்றோரிடம் பேசி, மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர்களின் தனித்திறமையை கண்-டறிந்து ஊக்குவித்தார்.கடந்த, 2ல் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், செங்குட்டை அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றார். அவருக்கு பதில், வசந்தி என்பவர், வகுரப்பம்பட்டி அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை, 9:00 மணிக்கு தலைமையாசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி துவக்கப்பள்ளி தலைமையாசிரியராக நியமிக்க வலியுறுத்தி மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்-பாமல் பள்ளி நுழைவாயில் முன், பெற்றோர் மற்றும் பொது-மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர் கணேஷ், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ், கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோர் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்-திற்குள் தலைமையாசிரியர்கள் இருவரிடமும் கடிதம் பெற்று, பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மாண-வர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.முன்னதாக பணி மாறுதலில் சென்ற தமிழ்மணி, பள்ளிக்கு வந்து மாணவ, மாணவியரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் மாணவ, மாணவியர் கண்ணீர் விட்டு அழு-தனர்.






      Dinamalar
      Follow us