/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
/
போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
ADDED : ஜன 07, 2025 01:14 AM
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், வட்டுவனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெல்மாரம்பட்டியில், 100க்கும், மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு, செயல்பட்டு வந்த, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த, 2018ல், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, ஜெல்மாரம்பட்டி, எலுமல்மந்தை, பவளந்துார் கிராமங்களை சேர்ந்த, 103 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரே வளாகத்தில், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.
இதில், உயர்நிலைப் பள்ளிக்கு, 2 வகுப்பறை மட்டுமே உள்ள, ஒரு கட்டடம் உள்ளது. ஒரு அறையில் மாணவர்களும், மற்றொன்றில் அலுவலக பொருட்களும் உள்ளன. 3 வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் மரத்தடியிலும், வகுப்பறைக்கு வெளியேயும் அமர்ந்து படிக்கின்றனர்.
பள்ளிக்கு தேவையான நிலத்தை, ஊர்மக்களே வாங்கி கொடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து, 6 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இப்பள்ளிக்கு இன்றும் வகுப்பறை கட்டடம் இல்லை. இதனால், மழை, வெயிலின் போது மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை காலங்களில் தார்ப்பாயை கீழே போட்டு படிக்கும் அவலம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஜெல்மாரம்பட்டி உயர்நிலைப்பள்ளிக்கு போதிய கட்டட வசதியை செய்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.