/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வகுப்பறை கட்டட வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
/
வகுப்பறை கட்டட வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
வகுப்பறை கட்டட வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
வகுப்பறை கட்டட வசதியின்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
ADDED : டிச 17, 2024 07:34 AM
அரூர்: அரூர் அருகே, வகுப்பறை கட்டட வசதி இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், 136 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உள்பட, 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் கடந்தாண்டு சேதமான, 2 வகுப்பறை கொண்ட கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, 2 வகுப்பறைகள் கொண்ட, 2 கட்டடங்கள் மட்டுமே
உள்ளன. இதில், 1 முதல், 8ம் வகுப்பு மாணவ, மாணவியர் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. பள்ளியில், போதிய
வகுப்பறை வசதி இல்லாததால், பல நேரங்களில் மாணவர்கள், பள்ளி வளாகத்திலுள்ள மரங்களின் அடியில் அமர வைக்கப்பட்டு
பாடம் நடத்தப்படுகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, போதிய கட்டட வசதி ஏற்படுத்தி தர, பொதுமக்களும்,
பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.