/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விதை சான்றளிப்பு துறைகளுக்கு தர்மபுரியில் ஆய்வு கூட்டம்
/
விதை சான்றளிப்பு துறைகளுக்கு தர்மபுரியில் ஆய்வு கூட்டம்
விதை சான்றளிப்பு துறைகளுக்கு தர்மபுரியில் ஆய்வு கூட்டம்
விதை சான்றளிப்பு துறைகளுக்கு தர்மபுரியில் ஆய்வு கூட்டம்
ADDED : டிச 13, 2024 01:16 AM
தர்மபுரி, டிச. 13-
தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தோட்டக்கலை துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் தலைமையில், விதை சான்றளிப்பு துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில், நுண்ணீர் பாசன திட்டத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் இணைந்து, நிலுவையிலுள்ள கூட்டாய்வுகளை துரிதபடுத்தி விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற திட்டங்களின் பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், வேளாண் துறை இணை இயக்குனர் மரிய ரவிஜெயக்குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் பாத்திமா, விதை சான்றளிப்புத்துறை இணை இயக்குனர் மணி, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் அறிவழகன் உள்பட, விதை சான்றளிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.