/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கல்
/
வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கல்
வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கல்
வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கல்
ADDED : ஆக 15, 2025 03:11 AM
அரூர், வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், அரூர் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த மோட்டூரை சேர்ந்த கிராம மக்கள் நேற்று அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மோட்டூரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்திற்கு நில உச்சவரம்பின் படி, அரசால் ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதை கடந்த, 35 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறோம். அந்நிலத்தில் கடந்தாண்டு ஜூலை, 8ல் மொரப்பூரை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்குவதாக தகவல் அறிந்து, ஊர்மக்கள் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டோம். மேலும், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம், இது குறித்து மனு அளித்தோம். இந்த மனு, மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வைக்கு சென்று, அவர் விசாரித்து பட்டா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது, ஊர்மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த நிலத்தில் பட்டா வழங்க மாட்டோம் என உறுதியளித்தனர். ஆனால் மீண்டும் அந்த நிலத்தில் பட்டா வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பட்டா வழங்குவதை நிறுத்த வேண்டும். மீறி பட்டா வழங்கினால், இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.