ADDED : டிச 13, 2024 01:15 AM
அ நிறம் | அளவு
அரூர், டிச.
13-
சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக, அரூர் சுற்று வட்டார பகுதிகளில், பெய்த கனமழையால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. நேற்று அதிகாலை முதல், அரூர் மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங் உள்ளிட்ட பகுதியில் உள்ள செலம்பை, கல்லாறு மற்றும் தடுப்பணைகள், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல், எருமியாம்பட்டி பீனியாறு, வாச்சாத்தி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்ததுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சித்தேரி மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில், திடீர் அருவிகள் தோன்றின.
