/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இண்டூர் பஸ் ஸ்டாண்டில் கழிவறை வசதியின்றி அவதி
/
இண்டூர் பஸ் ஸ்டாண்டில் கழிவறை வசதியின்றி அவதி
ADDED : செப் 27, 2024 07:28 AM
இண்டூர்: தர்மபுரி மாவட்டம் இண்டூரில், கடந்த, 2016ல், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இவ்வழியாக, பென்னாகரம், ஒகேனக்கல், அஞ்செட்டி மற்றும் தர்மபுரி வரும் பயணிகள், இண்டூர் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஓரிடத்தில் மட்டும், 6 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பயணிகள் காத்திருக்கும் இடத்தை ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பஸ் ஏற வரும் பயணிகள் அமர இடமின்றி, நின்றபடி காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்டில் கழிவறை வசதி இல்லை.
இது குறித்து, பொதுமக்கள் மற்றும் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இண்டூர் பஸ் ஸ்டாண்டில், கழிவறை மற்றும் கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.