ADDED : ஜூன் 14, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்., பெருமாள் கோவில் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள சாக்கடை கால்வாய்களில், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதி அருகே தேங்கும் கழிவுநீரில், கொசு மற்றும் புழுக்கள் உருவாகி, வீடுகளில் வசிக்கும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு காய்ச்சல் மற்றும் நோய்கள் ஏற்படுகிறது. இதனால், இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பொதுமக்கள், பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அப்பகுதி மக்களின் நலன்கருதி, கழிவுநீர் தேங்கும் சாக்கடை கால்வாயை முறையாக அள்ள கோரிக்கை எழுந்துள்ளது.