தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் கோடை மழை

தர்மபுரியில் கோடை மழை

தர்மபுரியில் கோடை மழை


ADDED : மே 07, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரியில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை, நேற்றிரவு பெய்த கனமழை ஓரளவு தணிந்தது.

அக்னிநட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த, 4ம் தேதி தொடங்கியது. முன்னதாக, கடந்த மார்ச், ஏப்., மாதத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து, வெயில் வாட்டி வதைத்தது. இதனால், வயதானவர்கள், பகல் நேரங்களில் வெளியில் செல்-வதை தவிர்த்து வந்தனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்பட்-டது. இதில், 100 டிகிரி பாரன்ஹீட் முதல், 103.4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்தது. இதனால், நீர்நிலைகள் வேகமாக வறண்டு வந்தன.

இந்நிலையில் நேற்று பகல் நேர வெப்பநிலை, 98.9 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து, மாலை, 6:45 மணி முதல், 7:30 வரை தர்மபுரி டவுன், சோலைக்-கொட்டாய், ஒட்டபட்டி, அதியமான்கோட்டை, தடங்கம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தர்மபுரி பகுதியில் ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தர்மபுரி டவுன் மற்றும் இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதி தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறுபோல் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்டி சென்றதுடன் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us