/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்
/
கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்
கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்
கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்
ADDED : மே 01, 2024 01:49 PM
பாப்பிரெட்டிப்பட்டி: வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல் சோர்வு, மயக்கம் உள்ளிட்ட
பிரச்னைகளை சமாளிக்க பொதுமக்களுக்கு உப்பு, சர்க்கரை கரைசல் நீர் வழங்கும் மையம், கடத்துார் அரசு மேம்படுத்த பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் துவங்கப்பட்டது.
கடத்துார் பஸ் ஸ்டாண்டில், இதை நேற்று பேரூராட்சி தலைவர் மணி துவக்கி வைத்து, மக்களுக்கு கரைசலை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர், துணைத்தலைவர் வினோத், மருத்துவ அலுவலர் கனல்வேந்தன், சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர்கள் பார்த்திபன், விக்னேஷ், கிராமப்புற சுகாதார செவிலியர் திவ்யா, பேரூராட்சி அலுவலர்கள் பெருமாள், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.