/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேதமான இருளர் குடியிருப்புகள் கணக்கெடுப்பு
/
சேதமான இருளர் குடியிருப்புகள் கணக்கெடுப்பு
ADDED : நவ 18, 2024 01:55 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட, இருளப்பட்டி ஊராட்சியில் பீரங்கி நகர், இந்திரா நகரில், இருளர் இன மக்க-ளுக்கு கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
தற்போது, மழையால் இந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. வீட்டில் படுக்க முடியாமல் குழந்தைகள், பெரியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையறிந்த தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், பாப்பிரெட்டிப்-பட்டி பி.டி.ஓ., செல்வன், தனி தாசில்தார் ஜெயசெல்வம், மண்-டல துணை பி.டி.ஓ., வேடியப்பன், உள்ளிட்ட அதிகாரிகள், நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒவ்வொரு வீடாக சென்று பழுதான வீடுகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
இருளர் இன மக்கள் வாழும் பகுதியில், பழுதடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் ஏற்கனவே ஆர்.ஆர்.எச்., திட்-டத்தில், 1.47 லட்சம் ரூபாய் மதிப்பில், பழுதடைந்த வீடுகள் பராமரிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.
சிறிய மற்றும் பெரிய அளவில் பழுதடைந்த, 17 வீடுகள் உள்-ளன. அந்த வீடுகளுக்கு தொகை ஒதுக்கப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும். கழிவுநீர் கால்வாய் முறையாக அமைக்க, திட்ட மதிப்பீடு செய்ய, ஒன்றிய உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகா-ரிகள் மூலம் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அப்-பணிகள் நடக்க உள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.