/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி செல்லா குழந்தைகள் அலுவலர்கள் கணக்கெடுப்பு
/
பள்ளி செல்லா குழந்தைகள் அலுவலர்கள் கணக்கெடுப்பு
ADDED : அக் 19, 2024 03:06 AM
தர்மபுரி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் அறிவுறுத்தலின் படி, தர்மபுரி மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் சுகன்யா தலைமையிலான அலுவலர்கள், தர்மபுரி ஒன்றியம் குப்பூர் பஞ்.,ல் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குப்பூர் பஞ்., உட்பட்ட பலாமரத்துக்கொட்டாயில் உள்ள, செங்கல் சூளைகளில் பணிபுரியும் பீஹார் மாநில தொழிலாளர்களின் குழந்தைகள், 8 பேர் இதுவரை எந்த பள்ளியிலும் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது.அவர்களை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், அவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகிலுள்ள, பலாமரத்துக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்த்தனர். அதில், 4 பேர் முதல் வகுப்பிலும், இருவர் 2ம் வகுப்பிலும், 2 குழந்தைகள், 3ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.
அனைவருக்கும், அரசின் விலையில்லா பாடநுால், சீருடை, நோட்டு மற்றும் எண்ணும் எழுத்தும் கையேடு வழங்கப்பட்டன. இவர்களை, தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர்களுக்கு இணை இயக்குனர் சுகன்யா அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, சி.இ.ஓ., ஜோதி சந்திரா, தொடக்கக்கல்வி அலுவலர் தென்றல், வட்டார கல்வி அலுவலர்கள் ஜீவா, நாசர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன், பள்ளி துணை ஆய்வாளர் பொன்னுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

