ADDED : நவ 17, 2024 01:34 AM
ஸ்வெட்டர் விற்பனை ஜோர்
அரூர், நவ. 17-
வடகிழக்கு பருவமழையால், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த, சில நாட்களாக குளிர்ந்த காற்றும், பரவலாக மழையும் பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால், ஸ்வெட்டர், குல்லா மற்றும் கம்பளி வாங்குவதில், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரூர் கடைவீதியிலுள்ள ஜவுளி கடைகள் மற்றும் சாலையோர கடைகளில், ரெயின் கோட், கம்பளி, ஸ்வெட்டர் மற்றும் தலைக்கு அணியும் குல்லா விற்பனை சூடுபிடித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு அளவுகளினாலான ஸ்வெட்டர், 350 ரூபாயில் இருந்து, 900 ரூபாய் வரையிலும், கம்பளி, 180 முதல் 1,200 ரூபாய் வரையும், ரெயின் கோட், 450 முதல், 600 ரூபாய் வரையும், குல்லா, 70 ரூபாயில் இருந்து, 120 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

