/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.512.52 கோடியில் 1,044 திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்
/
ரூ.512.52 கோடியில் 1,044 திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்
ரூ.512.52 கோடியில் 1,044 திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்
ரூ.512.52 கோடியில் 1,044 திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஆக 18, 2025 03:07 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தர்மபுரிக்கு வந்தார். தர்மபுரிக்கு வரும் வழியில், மாவட்ட எல்-லையான தொப்பூர், பாளையம் சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்-களில் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஒட்டபட்-டியில் நடந்த ரோடு ஷோவில் முதல்வர் ஸ்டாலின், மக்களை சந்-தித்து மனுக்களை பெற்றார்.
நேற்று காலை, 8:45 மணிக்கு ஒட்டபட்டி, அவ்வை வழி பிரிவு சாலை அருகே, முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். 9:00 மணிக்கு அதியமான்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு இ.கிஷான் கிரிடிட் கார்டு மூலம், பயிர் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தபின், 9:30 மணிக்கு தடங்கத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, 362.77 கோடி ரூபாய் மதிப்பில், 73 முடிவுற்ற பணி-களை திறந்து வைத்தும், 512.52 கோடி ரூபாய் மதிப்பில், 1,044 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 70,427 பயனாளிக-ளுக்கு, 830.06 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கியதும், அரசு துறைகள் சார்பில், அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வை-யிட்டார். தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க., அரசு செய்த சாதனை குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. மாவட்ட கலெக்டர் சதீஸ் வரவேற்றார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறு தானியத்தால், செய்யப்பட்ட அதியமான் மன்னர், அவ்-வைக்கு நெல்லிகனி வழங்கும் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கினார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், 9:55 மணிக்கு பேச தொடங்கி, 10:22 மணிக்கு பேசி முடித்தார்.
இதில், தடங்கம் சிப்காட்டில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறு-வனங்களுக்கான ஆணை, பயனாளிகளுக்கான நலத்திட்டங்களை வழங்கினார். நலத்திட்டத்திற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் சதீஸ், முதல்வர் கையில் வழங்கியதும், அங்கிருந்து திரும்பி செல்ல முயன்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின், கலெக்டர் சதீஸின் கையை பிடித்து இழுத்து நிறுத்தி, நலத்-திட்ட உதவிகளை வழங்கும் வரை, அருகில் நிற்க வைத்துக்-கொண்டார்.
தடங்கத்தில் விழா மேடை அமைக்கப்பட்ட இடத்தில், மக்கள் விழாவை காண மேடையின் இரு பக்கங்களிலும் எல்.இ.டி., திரைகள் மற்றும் ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் விழா மேடைக்கு வரும் வரை, பயனாளிகளை மேடைக்கு வரவழைத்து, துறை சார்ந்த அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். அதுவரை ஆடியோ சரியாக இருந்தது. முதல்வர் மேடைக்கு வந்த பின், மேடையின் இடது புறமிருந்த ஸ்பீக்கர் செயல்படவில்லை. இதனால் அறிவிப்புகளை கேட்க முடியாமல் மக்கள் தவித்தனர். பின், 10:04 மணிக்கு ஆடியோ சரி செய்யப்-பட்டு, முதல்வரின் தொடர் பேச்சை மக்கள் கேட்டனர்.
விழா ஏற்பாட்டு பணிகளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தர்மபுரி எம்.பி.,யுமான, மணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனி-யப்பன் ஆகியோர் கவனித்து கொண்டனர்.
இதில், முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிர-மணி, முன்னாள் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி, தர்மபுரி நகர செய-லாளர் நாட்டான் மாது, தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உட்பட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகி
கள், தொண்டர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.