/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம்
/
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 10, 2024 01:31 AM
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனை கூட்டம்
தர்மபுரி, அக். 10-
தர்மபுரியில், தமிழக விவசாயிகள் சங்க, மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் சின்னசாமி, மாநில துணை தலைவர்கள் ஆறுமுகம், செந்தில் ஆகியோர் பேசினர்.
இதில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, எண்ணேகொல்புதுார் தடுப்பணையில் இருந்து, வலதுபுற வாய்க்கால், தும்பலஹள்ளி அணை வாய்க்கால் திட்டம், அழியாளம், துாள்செட்டி ஏரி திட்டம், புலிகரை ஏரி வாய்க்கால் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கியும் இதுவரை பணி நடக்காமல், விவசாயிகளை வறட்சியில் தள்ளும் நிலை உள்ளது. இதை தடுக்க மேற்கண்ட நீர்பாசன திட்டங்களை, தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து மொரப்பூர், கடத்துார், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு, 38 ஏரிகளுக்கு மோட்டார் மூலம், தண்ணீர் நிரப்பும் திட்டத்துக்கு, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்துக்கு இதுவரை, தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. அதற்கான நிதியை விரைந்து ஒதுக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான,
ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். நல்லம்பள்ளி அடுத்த, பாளையம்புதுார் ஜெகநாதன்கோம்பை அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தர்மபுரி சனத்குமார் நதியை துார்வாரி, தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
மாவட்டத்தில் கடும் வறட்சியால் விவசாயத்தை விட்டு, வெளியேறி வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி செல்லும் அவல நிலையை போக்க, தமிழக அரசு மேற்கண்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற கோரி வரும் நவ., 3ல், விவசாயிகள் தண்ணீர் கோரிக்கை மாநாடு
நடத்துவது என, தீர்மானம்
நிறைவேற்றினர்.