/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்
ADDED : டிச 05, 2025 11:22 AM
தர்மபுரி: பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல் உள்-ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், சாலைமறியலில் ஈடுபட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 136 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்-நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், சாலை-மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். இதில், தமிழக முதல்வரின், 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்-டத்தை, தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்ப-டுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழி-யர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்-பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் அரசு ஊழியர்களுக்கு அரசு சிறப்பு சலுகை-களை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்க-ளுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், என்பன உள்-ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட, 46 பெண்கள் உள்பட, 136 பேரை போலீசார் கைது செய்தனர்.

